×

நாகர்கோவில் அருகே ரயில் பாதையில் மண்சரிவு.: மண்சரிவு அடிக்கடி நடைபெறுவதாக மக்கள் புகார்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பள்ளியாடி அருகில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டப்பதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு பெய்த மழையால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் பள்ளியாடி அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவால் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வரவேண்டிய சரக்கு ரயில் ரத்து செய்யப்பட்டது. அதுபோல நாகர்கோவிலில் பணியாற்றும் பணியாளர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் பணியாளர்கள் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஜேசிபி வாகனம் மூலம் மண்சரிவை அகற்றம் பணி நடைபெற்று வருகிறது. மண் அகற்றும் பணி மிகவும் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : rail track ,Nagercoil ,landslides , Landslide ,rail track ,Nagercoil,frequent, landslides
× RELATED தா.பழூர் அருகே இடிவிழுந்ததில் கோயில்...