கரூர் அருகே சேவல் சண்டை சூதாட்டம்: கத்தி குத்தியதால் இளைஞர் உயிரிழப்பு

கரூர் : கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட சேவல் சண்டையில் கத்தி குத்தியதில் 30 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். நாலுகால் குட்டை பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டை சூதாட்டம் உயிரிழப்பில் முடிந்துள்ளது. சேவல் காலில் கட்டி இருந்த கத்தி குத்தியதில் நெடுங்கூரை சேர்ந்த முருகேசன் என்ற 30 வயது இலைஞரின் தொடையில் ரத்தம் அதிக அளவில் வெளியேறியுள்ளது.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த க.பரமத்தி காவல்நிலைய போலீசார் முருகேசனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கூர்மையான கத்தி நரம்பில் குத்தியதால் ரத்தம் அதிக அளவில் வெளியேறி அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>