×

நேபாள எல்லையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர் உடல் சொந்த ஊர் வந்தது

திங்கள்சந்தை:  நேபாள எல்லையில் கொல்லப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் மணிகண்டன் உடல் நேற்று இரவு சொந்த ஊர் வந்து சேர்ந்தது.குமரி மாவட்டம் குருந்தன்கோடு, வீரவிளை பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ் மகன் மணிகண்டன்(29). கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி துணை ராணுவ படை பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 7ம் தேதி அன்று இரவு நேர ரோந்து பணியின் போது நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு மாடு கடத்த முயன்ற கடத்தல்காரர்களை தடுத்தபோது கடத்தல்காரர்கள் ஆயுதத்தால் மணிகண்டனின் தலையில் பயங்கரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார்கள்.

அதன் பிறகு மணிகண்டனை உடனடியாக மீட்டு மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிட்சை பெற்று வந்தார். அங்கு ஜூன் 5ம் தேதி அன்று இரவு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மணிகண்டனின் உடல் விமானத்தில் திருவனந்தபுரம் எடுத்துவரப்பட்டு நேற்று இரவு சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது. இன்று (8ம் தேதி) காலை 8.30 மணிக்கு குருந்தன்கோடு, வீரவிளையில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நிகழ்வில் மாவட்ட கலெக்டர், எஸ்.பி, ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags : border ,soldier ,home ,Nepal , body , soldier killed ,Nepal border,came home
× RELATED கேரள எல்லைக்குட்பட்ட கிளிகொல்லூர்...