×

சிதம்பரத்தில் சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்தவர் கொலை.:குடும்பமே சேர்ந்து இளைஞரை கொலை செய்ததால் பரபரப்பு

சிதம்பரம்: சிதம்பரத்தில் சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை குடும்பமே சேர்ந்து கொலை செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் அன்பழகன், அதே பகுதியை சேர்ந்த 10 -ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இது குறித்த புகாரின் பெயரில் காவல்துறை எச்சரித்தும் அடங்காக அன்பழகன் தொடர்ந்து அந்த மாணவியை தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியின் வீட்டு பக்கம் சென்ற அன்பழகன் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அன்பழகனின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் சிறுமியின் வீட்டுக்கு சென்று விசாரித்த போலீசார், அங்கு அன்பழகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. கடந்த வெள்ளி கிழமை அன்பழகனை வீட்டுக்கு வரும்படி சிறுமி அழைத்துள்ளார். அன்பழகன்  வீட்டுக்கு வந்த உடன் மறைந்து இருந்த சிறுமியின் அண்ணன் அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதனை அடுத்து சரிந்து விழுந்த அன்பழகனை குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ளது.

அன்பழகனின் உடலை மறைக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் காவல்துறையினரிடம் அவர்கள் சிக்கியுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் சிறுமியின் அண்ணன் உள்பட நான்கு போரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.



Tags : Chidambaram ,murder , Chidambaram , girl, romantic,murder, Family,
× RELATED பலத்த காற்றுடன் மழை: இருட்டில் சிதம்பரம் ரயில் நிலையம்