×

சீசன் துவங்கிய நிலையில் பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் கொட்டுகிறது

தென்காசி: குற்றாலத்தில் நேற்று முன்தினம் மெயின் அருவியில் தண்ணீர் விழத் துவங்கிய நிலையில் நேற்று பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் கொட்டியது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் அறிகுறி கடந்த 2ம் தேதி தென்பட்டது. இதைதொடர்ந்து மலைப்பகுதியில் பெய்த மழையால் நேற்றுமுன்தினம் மெயின் அருவியில் தண்ணீர் விழுந்தது. இதனால் குற்றாலம் சீசன் துவங்கிவிட்ட நிலையில் இரண்டாவது நாளான நேற்று பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் விழத்தொடங்கியது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுந்தது.

 ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் விழுகிறது. நேற்று மதியம் பழைய குற்றாலத்திலும் சிறிதளவு தண்ணீர் விழத்துவங்கியது. நேற்று பகலில் இதமான சூழல் நிலவியது. வெயில் இல்லை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. காலை மதிய வேளைகளில் சாரல் பெய்தது. குற்றாலத்தில் சீசன் துவங்கிய போதும் அருவிகளில் ஓரளவு தண்ணீர் வரும் நிலையிலும் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : season ,Courtalla , onset , season, old Courtalla waterfall ,watering
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...