×

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கனை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம்; தமிழக அரசு அறிவிப்பு...!

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அறிவித்தது. முதல் ஊரடங்கை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு அறிவித்தார். அதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. எனினும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்திலும், வரும் கடந்த மே 14-ம் தேதி முதல் அரசு அறிவித்து வருகிறது. 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், 8 மண்டலங்களாக பிரிந்து, மண்டலம் விட்டு மண்டலம் சென்றால், இ-பாஸ் அவசியம், மண்டலத்திற்குள் செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்றால் கட்டாயம் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று அறிவித்தது.

இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பத்திரப்பதிவு டோக்கன்களை இ-பாஸ் ஆக பயன்படுத்தலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பத்திரப்பதிவு டோக்கனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தை விட்டு வெளியேறும்போது பத்திரப்பதிவு ஆவணத்தை ஆதாரமாக பதிவு செய்யப்போகும் ஆவணத்தையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.


Tags : district ,Tamilnadu Government ,Government ,Tamilnadu , You can use the bond registration token as an e-pass to leave the district; Government of Tamilnadu announces ...!
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...