×

கொரோனாவின் கட்டுக்குள் வந்தது சென்னை மாநகரம் : இராயபுரத்தில் 4 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு

சென்னை:  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி நிலவரப்படி, சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு தொற்று என்பதை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 22,149 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,637 பேர் குணம் அடைந்துள்ளனர். 11,030 பேர் பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 60.06% பேர் ஆண்கள், 39.93% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 3,859 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில்  2,835 ஆகவும். கோடம்பாக்கத்தில் 2,431 ஆகவும், தேனாம்பேட்டையில் 2,518 ஆகவும், திருவிக நகரில் 2,167 ஆக உள்ளது.

ஜூன் 8ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

ராயபுரம் – 3,859
கோடம்பாக்கம் – 2,431
திரு.வி.க நகரில் – 2,167
அண்ணா நகர் – 1,974
தேனாம்பேட்டை – 2,518
தண்டையார் பேட்டை – 2,835
வளசரவாக்கம் – 1,054,
அடையாறு – 1,274,
திருவொற்றியூர் -813,
மாதவரம் – 614
பெருங்குடி – 415,
சோளிங்கநல்லூர் – 390,
ஆலந்தூர் – 400,
அம்பத்தூர் – 807,
மணலி – 328 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 270 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : city ,Chennai ,Royapuram Chennai Metropolitan Area , Chennai Corporation, Resource Development, Raipur, Kodambakkam, Corona
× RELATED தனிநபர் வாகனங்களில் அரசால்...