×

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை; 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை...!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தின்  பின்ஜோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, ராணுவம்  மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய குழுக்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகப்பட்ட இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கியபோது அப்பகுதியில்  மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்களை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், தொடர்ந்து தாக்குதலில்  ஈடுபட்டுள்ளதாக ஜம்முகாஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்த அனைத்து பயங்கரவாதிகளும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : firing ,security forces ,terrorists ,Jammu ,Kashmir , Heavy firing between security forces and terrorists in Jammu and Kashmir; 4 terrorists shot dead
× RELATED ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. 6ம்...