×

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி புனித ஹஜ் பயணம் ரத்து: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தாண்டு புனித ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் பயணம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஏராளமானோர் முன்பணத்தை செலுத்தி இருந்தனர். இது குறித்து இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடென்ட் அபுபக்கர் அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமடைவதால், சவுதி அரேபியா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹர்பியூப் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் சவுதி விமானம் ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து தான் இயக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதனால், “ஹஜ் 2020”க்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் துரிதமாக வேலை செய்ய முடியாது.

அதே போல், இந்தோனேசியாவும் ஹஜ் 2020ம் ஆண்டுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி விட்டார்கள். இதன் மூலம் இந்திய ஹாஜிகள் ஹஜ் 2020க்கு பணம் செலுத்தியிருப்பவர்கள் அனைவரும், 100 சதவீதம் அந்த பணத்தை திருப்பி எடுத்து கொள்ளலாம் என்று இதன் மூலம் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம். மத்திய அரசு, அரும்பாடுபட்டு, ரொம்ப சிரத்தையாக இந்த ஹஜ் 2020 ஏற்பாடு செய்த வகையிலும், சவுதி அரசாங்கம் கொரோனா வைரசால் இதை ரத்து செய்யும் நோக்கத்தில் உள்ளது. இதனால் இந்த “ஹஜ் 2020” ஹஜ் பயணம் ரத்து செய்யப்படும் போல் தெரிகிறது. அதனால், முன்பணம் கட்டிய அனைத்து ஹாஜிகளும் முழுமையாக பணத்தை பெற்றுக் கொள்ளலாம். வரும் 2021ல் உலகத்தில் உள்ள அனைவரும்  ஹாஜி செய்யக்கூடிய பாக்கியத்தை கொடுத்து, நமக்கு 2 லட்சம் மட்டுமல்லாமல், கூடுதலாக விசா கிடைத்து அனைவரும் சிறப்பாக ஹஜ் செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Echoes Echoing Holy Hajj Trip: Indian Hajj Association ,President ,Echo Echoes Holy Hajj Trip , Coroner Virus Echo Echoes ,Holy Hajj Trip,Indian Hajj Association President
× RELATED கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே 37 பேர்...