×

சிகிச்சை பெறுவோர், குணமடைவோர் கிட்டத்தட்ட 50:50

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 50:50 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நேற்று முதல் முறையாக 10 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 9,971 பாதிக்கப்பட்டதை  தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,46,628 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், 287 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த இறப்பு எண்ணிக்கையும் 6,929 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3ம் தேதி இறந்தோரின் எண்ணிக்கை 5,815 ஆக இருந்த நிலையில், நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 6,929 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் 1,114 பேர் இறந்துள்ளனர். அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 250 பேர் வரை பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 75 நாட்கள் முடிந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வைரசால் பாதிக்கப்பட்டு 1,20,406 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதே நேரம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,19,292 ஆக உள்ளது. இதனால் குணமடைந்து வருவோரின் சதவீதம் 48.36 ஆக உயர்ந்துள்ளது.நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 287 பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 6,929 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இருந்தே, வைரசால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால், பாதிப்பு என்பது மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் பாதிக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கையில் 33 சதவீதம் பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பினர். அதன் பிறகு, இந்த சதவீதம் தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி, குணமாகி திரும்புவோர், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் சிறிய வித்தியாசம் மட்டுமே உள்ளது. தற்போது, குணமடைந்தோர் எண்ணிக்கை 48.36 சதவீதமாகவும், சிகிச்சை பெறுவோர் 51.64 சதவீதமாகவும் உள்ளனர். விரைவில் இது, 50:50-யாக மாறவும் வாய்ப்புள்ளது.

Tags : healers ,Therapists , Therapists, healers, almost 50:50
× RELATED பாதிப்பை விட குணமடைவோர் அதிகரிப்பு 3,367 பேருக்கு கொரோனா: 64 பேர் பலி