×

தனியார் பள்ளிகளுக்கு சேவை மனப்பான்மை இல்லை: அருமை நாதன்,மாநில தலைவர், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் வீடுகளில் முடங்கியதால், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக வருவாய் இழப்பை சொல்ல வேண்டும் மாதாந்திர ஊதியம் பெறுவோர் நிலை வேறு, தினமும் வேலைக்கு செல்பவர்கள், குறைந்த வருவாய் உள்ளவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேதனை நிறைந்த காலத்தில் பலர் இருக்கின்ற நிலையில் தான் தனியார் பள்ளிகளில் இருந்து, பெற்றோருக்கு குறுஞ்செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. அதில் தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் கொரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரும், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது, ்அப்படி கேட்கும் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
அரசின் அறிக்கை, இயக்குநரின் சுற்றறிக்கை ஆகியவை எழுத்து வடிவில் மட்டுமே உள்ளன. ஆனால் அவை நடைமுறைக்கு வரவில்லை. கல்விக் கட்டணம் கேட்கும் பள்ளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வசதி படைத்த பெற்றோர் தவிர நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெற்றோர் தற்போது கல்விக் கட்டணம் ெசலுத்த முடியாது என்று தெரிவித்த பிறகும் அவர்களுக்கு அவகாசம் கொடுக்காமல், கட்டணம் செலுத்த பணம் இல்லையா, உங்களுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என்கின்றனர். அதற்காக சில தனியார் ஏஜென்சிகளை காட்டுகின்றனர். அந்த ஏஜென்சிகள் வட்டியில்லா கடன் வழங்கும். அந்த கடனை வாங்கி கல்விக் கட்டணத்தை செலுத்துங்கள் என்று கூறுகின்றனர். இதற்காகவே தனியார் நிதி நிறுவனங்களுடன் தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால், யார் எப்படிப் போனால் என்ன, தனியார் பள்ளிகளை நடத்துவோரின் வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். அவர்களுக்கு சேவை மனப்பான்மை என்பது இல்லை. அத்துடன் நில்லாமல் புத்தகம் கொடுக்கிறோம், சீருடை கொடுக்கிறோம், ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்துகிறோம் என்று கூறி கடனுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றும் ஆலோசனை வழங்குகிறார்கள்.

கல்விக் கட்டணம் கேட்கக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆசிரியர்களுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், வரி செலுத்த வேண்டும் எ்ன்று தனியார் பள்ளிகள் திரும்ப திரும்ப கூறிவருகின்றன. பெற்றோரிடம் கட்டாயப்படுத்துவதை விடுத்து, இதற்காக அரசிடம் கடன் கேட்கலாம்.  வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்துவதை, மற்ற குழந்தைகள் பார்த்து தாழ்வு மனப்பான்மையால் தவிக்கின்ற நிலை ஏற்படுகிறது. பெற்ேறாருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால்,  கல்வி கட்டணம் கேட்டு நெருக்கடி கொடுக்கும் பள்ளிகளை சமாளிக்க இந்த ஊரடங்கு முடியும் வரையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் தனி அதிகாரிகள் நியமிக்க வேண்டும்.  இது போன்ற பிரச்னைகளை அந்த அதிகாரிகள் மூலம் கையாள வேண்டும். பெற்றோரிடம் இருந்து வரும் புகார்களை பெற்று அந்த தனி அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத குழந்தைகளின் மாற்றுச் சான்றை கொடுத்து வெளியேற்றும் செயல்களும் தொடரும். கொரோனா ஊரடங்கு முடியும் வரை அரசு இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி நெருக்கடி கொடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வசதியுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்துவதை, மற்ற குழந்தைகள் பார்த்து தாழ்வு மனப்பான்மையால் தவிக்கின்ற நிலை ஏற்படுகிறது. பெற்ேறாருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது.



Tags : schools ,Blessed Nathan ,Head of State , Private schools , service attitude, Blessed Nathan, Head of State, Tamilnadu Student Parent Welfare
× RELATED டெல்லியில் 100 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு