ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர் ஹர்திக் இருந்தால் இந்தியாவுக்கு சாதகம்...இயான் சேப்பல் கணிப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று முன்னாள் நட்சத்திரம் இயான் சேப்பல் கூறியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் குறித்து இயான் சேப்பல் கூறியதாவது: இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ள டெஸ்ட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தொடரில் ஹர்திக் விளையாடினால் அது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் சோர்வடையும்போது, ஆஸி. பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தத்தை நீட்டிக்க அவரை பயன்படுத்திக் கொள்ளலாம். அணியில் கூடுதலாக ஒரு ஸ்பின்னரை சேர்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்.

அதே சமயம் அஷ்வின், குல்தீப், ஜடேஜா ஆகியோரில் இருந்து சரியான சுழற்பந்துவீச்சு கூட்டணியை தேர்வு செய்வது இந்திய அணிக்கு தலைவலியாகவே இருக்கும். வார்னர், ஸ்மித், லாபுஷேன் ஆகியோர் அடங்கிய பலம்வாய்ந்த ஆஸி. பேட்டிங் வரிசையை கட்டுப்படுத்துவது இந்திய வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமையும். கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட், பேட்டின்சன் என எங்கள் வேகப் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு இயான் சேப்பல் கூறியுள்ளார்.

Related Stories: