×

கொரோனா பீதியில் மக்கள் உள்ள நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை வீடியோ மூலமாக துவக்கியது பாஜ: அமித்ஷா பங்கேற்று உரை

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் பிரசார யுத்திகளை காங்கிரசும், பாஜ.வும் இப்போதே தொடங்கி விட்டன. நாடே கொரோனா பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில், இத்தேர்தலுக்கான டிஜிட்டல் வழி பிரசாரத்தை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாஜ முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். பாட்னாவில் காணொளி காட்சி மூலமாக இது நடந்தது.இதில், பீகார் மக்களிடையே ‘ஆத்மனிர்பர் பாரத்’ என்ற தலைப்பில் அமித்ஷா பேசியதாவது:பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியின்போது மாநிலத்தின் வளர்ச்சி 3.9 சதவீதமாக இருந்தது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது 11.3 சதவீதமாக இது உயர்ந்துள்ளது. பீகாரில் இருந்த காட்டாட்சி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜ கூட்டணி ஆட்சியில்தான் மக்கள் ராஜ்ஜியமாக மாறியது.

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இந்த பிரசாரம் பீகார் தேர்தல் பிரசாரத்துக்கானது அல்ல. கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தின் போது, மக்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கத்திலேயே தான் ஏற்பாடு செய்யப்பட்டது. கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாட்டை ஒன்றிணைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை எதிர்க்கட்சியினர் அரசியலாக கருதி நிராகரித்த போதிலும், நாடு அவருடன் நின்று அவரது கோரிக்கைகளை பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Bihar ,Amit Shah ,assembly election , Bihar assembly, election , video
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...