×

நாளை முதல் திறக்கப்படுகிறது வழிபாட்டு தலங்கள்: 80 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன், திருப்பதி ஏழுமலையான் காட்சி

திருமலை: நாளை முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஆந்திர மாநில அரசின் உத்தரவின் அடிப்படையில் நாளை துவங்கி இரண்டு நாட்கள் பரிசோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் பக்தர்கள் ஆகியோருக்கு நாளொன்றுக்கு 6,000 பேர் என்ற அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது. அதன்பின் 11-ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களுக்கும் ஏழுமலையானை வழி பட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசன வரிசைகள், லட்டு கவுண்டர் உள்ளிட்ட இடங்களில் இடைவெளியை கடைப்பிடித்து 6 அடி தூரத்திற்கு ஒருவர் நிற்கும் வகையில் ரேடியம் ஸ்டிக்கர்கள் தரையில் பாதிக்கப்பட்டுள்ளன.

 இதுதவிர ஏழுமலையான் கோவில், அன்னதான கூடம் உள்ளிட்ட இடங்களில் கால் விரல்களால் இயக்கக்கூடிய குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஏழுமலையான் கோவில் உண்டியலை தொட பக்தர்கள் விரும்பினால் முன்னதாக கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து கொள்வதற்கான வசதியும் உண்டியல் அருகே செய்யப்பட்டுள்ளது. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் திருப்பதி மலைக்கு கொரோனா அறிகுறிகள் உள்ள பக்தர்கள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் ஆகியோர் கண்டிப்பாக வரக்கூடாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோவிலுக்குள் வரிசையாக செல்ல வேண்டுமென்றும் தேவஸ்தானம் பக்தர்களை கேட்டு கொண்டுள்ளது. என்பது நாட்களுக்கு பின் ஏழுமலையான் கோவிலில் நாளை காலை 6 மணிக்கு துவங்கி மாலை ஏழரை மணி வரை தேவஸ்தான ஊழியர்கள் உள்ளூர் பக்தர்கள் ஆகியோருக்கு சாமி தரிசனம் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் ஏழுமலையான் கோவிலை சுமார் இரண்டரை டன் எடையுள்ள பல்வேறு வகையான உள்ளூர் மலர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் 50 ஆயிரத்தில் துவங்கி ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள் சாமி கும்பிடும் ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் சில நாட்கள் மணிக்கு 500 பேர் என்ற கணக்கில் 6000 பக்தர்கள் மட்டுமே வழிபட உள்ளனர்.

சபரிமலை,  குருவாயூர் கோயில்கள் திறப்பு

சபரிமலை ஐயப்பன் மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோயில்களும், கொரோனா கால முடக்கம் முடிந்து, பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறக்கப்படுகின்றன. குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கமும், சபரிமலை ஐயப்பன் கோயில் ஜூன் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கும் திறக்கப்படுகின்றன. இந்தத் தகவலை கேரள தேவஸ்வம் துறை அமைச்சர் காடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Pilgrimage ,devotees ,Tirupathi , Places of Worship, Sabarimalai Iyappan, Tirupati Ezumalayan
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத...