ஊரடங்கு தளர்வால் மெக்சிகோவில் மீண்டும் பரவும் கொரோனா: கல்லறை தோட்டங்கள் பிணக்குவியல்களாக காட்சி அளிக்கும் அவலம்!

மெக்சிகோ: கொரோனா ஊரடங்கு தளர்வால் மெக்சிகோவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மெக்சிகோவில் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருவதால் கல்லறை தோட்ட பணியாளர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஊரடங்கு விதிகளை தளர்த்தியதால் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் உயிரிழப்புகள் கூடி கொண்டே செல்லும் மெக்சிகோவில் இன்று புதிதாக 340 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். இதையடுத்து அந்த நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 511 ஆக உயர்ந்துள்ளது. கல்லறைகளில் பிணங்கள் குவிந்து கொண்டே செல்வதால் அங்கு பணிபுரிபவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். வைரஸ் தொற்று தீவிரமடைந்த பின்னர் மருத்துவமனையை நாடுவதே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அங்குள்ள மக்களில் ஒருவர் கூறியதாவது, பொதுமக்கள் தொற்று அறிகுறி இருந்தால் சிகிச்சை எடுக்க தாமதிக்க வேண்டாம். காய்ச்சல், இருமல், தொண்டை வலி இப்படியான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், வைரஸ் தொற்று உள்ளவர்கள் மிகவும் தாமதமாகவே மருத்துவமனையை நாடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என தெரிவித்தார். மெக்சிகோவில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துவிட்டது. வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 14 சதவீதம் பேர் உயிரிழந்துவிட்டனர். 81 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories:

>