×

ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்தியவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது : மத்திய பிரதேச மாநில சாமியார் திட்டவட்டம்

போபால் : மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர், ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்தியவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, 5-ம் கட்ட ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிடபோது, 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து வழிப்பாட்டு தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில் முகக்கவசம் அணிய வேண்டும்,  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், சிலைகளை தொடக்கூடாது, புனித நூல்களுக்கு அனுமதி கிடையாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதவழிப்பாட்டு தலங்களுக்கு செல்வதற்கு முன் சானிடைசர் கொண்டு கைகளை கழுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மத்தியபிரதேசத்தின் போபாலில் உள்ள நவதுர்கா கோயில் சாமியார் ஒருவர், ஆல்கஹால் சானிடைசரை பயன்படுத்தியர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், ஆல்கஹால் சாப்பிட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காதபோது, ஆல்கஹால் கலந்த சானிடைசர் பயன்படுத்துபவர்களை எப்படி கோயிலுக்குள் அனுமதிக்க முடியும் என்று கேட்டுள்ளார். அதற்கு மாற்றாக கோயில்களுக்கு வெளியே சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்யலாம். எப்படியும் கோயில்களுக்கு வருபவர்கள் குளித்து சுத்தமாக தான் வருவார்கள்“ என்றும் கூறியுள்ளார்.

Tags : Madhya Pradesh State Chairperson Scheme , Alcohol, Sanitizer, Temple, Allow, Can't, Madhya Pradesh, Samaniar, Project
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...