×

உலகளவில் கொரோனா பாதிப்பு: உயிரிழப்பில் அமெரிக்காவை மிஞ்சியது பிரேசில்!

பிரேசில்: உலக அளவில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நாடுகளில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பிரேசில் முதலிடம் பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றானது லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் சமீப காலமாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை நிலவரப்படி, பிரேசிலில் 27 ஆயிரத்து 500 பேருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் அங்கு 910 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலும் இன்று காலை நிலவரப்படி 23 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பை பொறுத்தவரை 700 பேர் இறந்துள்ளதால் இதுவரை 1 லட்சத்து 12 பேர் மரணித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ரஸ்யா உள்ளது. உயிரிழப்பில் பிரேசில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மெக்சிகோ இடம்பிடித்துள்ளது.


Tags : Brazil ,US , Global, Corona, loss of life, the United States, Brazil,
× RELATED பிரேசிலில் 80 ஆண்டுகளில் இல்லாத பெருமழை : பலி எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு!!