×

கொரோனா தொற்று கூடாரமான வட சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் திட்டம் : விரைவில் அறிவிப்பு!!

சென்னை: கொரோனா தொற்று அதிகம் உள்ள வட சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 20,993 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10,502 பேர் குணம் அடைந்துள்ளனர். 10,066 பேர் பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 3,717 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் 2,646 ஆகவும். கோடம்பாக்கத்தில் 2,323 ஆகவும், தேனாம்பேட்டையில் 2,734 ஆகவும், திருவிக நகரில் 2,073 ஆக உள்ளது.

சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பில் வட சென்னையில் மட்டும் 50% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 6 மண்டலங்கள் வட சென்னையில் உள்ளனர். திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், மாதவரம் ஆகிய 6 மண்டலங்கள் வடச் சென்னையில் உள்ளனர். வடசென்னையில் வசிக்கும் 24 லட்சம் பேரில் இதுவரை 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பலியான 204 பேரில் வட சென்னையில் மட்டும் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராயபுரத்தில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அதிகாரிகள் முதலில் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகரில் பாதிப்பு குறையாததால் வட சென்னையை அடைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். எனினும் முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து உத்தரவு ஏதும் வரவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.தற்போது தெரு அடைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே முழு கவனம் செலுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட சென்னையில் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது குறித்து கொரோனா நோய் தடுப்பு அதிகாரிகள் கூறியதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 40 ஆயிரம் தெருக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளன. சென்னையில் 6,900 தெருக்களில் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. பாதிப்பு உள்ள தெருக்களில் பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மும்மரமாக உள்ளது.சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் தெரு அடைப்பு திட்டம் அமலாகிறது, என்றும் கூறியுள்ளனர்.

வட சென்னையில் பாதிப்பு நிலவரம்:

ராயபுரம் – 3,717
திரு.வி.க நகரில் – 2,073
தண்டையார் பேட்டை – 2,646
திருவொற்றியூர் -784,
மாதவரம் – 579
மணலி – 312


Tags : Chennai ,infestation tent ,Corona , Corona, Infection, North Madras, Back, Full Curfew, Officers, Plan, Announcement
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...