×

கன்னியாகுமரியில், சாலைப்பணி தாமதம்: மறியல் செய்த திமுக எம்எல்ஏ குண்டுகட்டாக கைது

தென்தாமரைகுளம்:  கரும்பாட்டூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆஸ்டின் எம்.எல்.ஏ. குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்குட்பட்ட கரும்பாட்டூர் ஆரம்பப்பள்ளி சாலை பல வருடங்களாக  பழுதடைந்து காணப்பட்டது. ஆஸ்டின் எம்எல்ஏவிடம் அந்த சாலையை செப்பனிட்டு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஆஸ்டின் எம்எல்ஏ, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊராட்சி பொது நிதியிலிருந்து 15 லட்சம் ஏற்பாடு செய்தார்.  இந்த சாலையை சீரமைப்பதற்கான டெண்டர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடப்பட்டது. இந்த பணியை 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

ஆனால், பணிகள் தொடங்கப்படாததால், ஆஸ்டின் நேற்று பொதுமக்கள் மற்றும் திமுகவினர் பொற்றையடியில் இருந்து சாமிதோப்பு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கொட்டும் மழையில்  நடுரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்டார்.  இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.  அவரோடு திமுகவினர் 15 பேரையும் கைது செய்து  ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.



Tags : Kanyakumari ,DMK ,DMK MLA , Kanyakumari, road work delay, picket, DMK MLA, arrest
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...