திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் உதவியாளர் மகனுக்கு கொரோனா

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் 37 வயது வாலிபர், புதுப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டரின் கார் டிரைவராக உள்ளார். இவர் சென்னையில் கடந்த 10 நாளாக சுகாதாரத்துறையில் டிரைவர் பணிக்காக சென்று வந்தார்.  இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை இவர் பணிக்காக மீண்டும் சென்னைக்கு சென்றார். அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 3 மணியளவில் வந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவல் திருப்பத்தூர் கலெக்டருக்கு தெரி விக்கப்பட்டது. இதையடுத்து, கலெக்டர் அந்த வாலிபரை வேலூருக்கு அனுப்பி வைக்க கூறினார். தொடர்ந்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ெகாரோனா பாதித் தவரின் தந்தை அமைச்சர் கே.சி.வீரமணியின் உதவியாளராக உள்ளார்.

Related Stories:

>