×

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!.. நெட் ஸ்பீடுக்காக வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த கேரள மாணவி; குவியும் பாராட்டுக்கள்!!

திருவனந்தபுரம் : ஆன்லைன் வகுப்புகளில் கற்றுக் கொள்ள தனது முன்பிருந்த தடைகள் அனைத்தையும் தாண்டி கல்வி கற்க வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்ட கல்லூரி மாணவிக்கு பொது மக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கலை அடுத்த அரீக்கல் என்னும் பகுதியை சேர்ந்தவர் நமீதா நாராயணன். இவர் குட்டிபுரத்திலுள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கேரளாவில் கடந்த திங்கள் கிழமை ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆனால், மாணவியின் அறையில் போதிய நெட் ஸ்பீட் இல்லாத காரணத்தினால் அவரால் சரிவர படிக்க முடியவில்லை.

வீட்டை சுற்றி பல்வேறு இடங்களில் நின்று சோதித்து பார்த்தும் நெட் இணைப்பு ஸ்பீடாக இல்லை. இதனால், மாணவி சரிவர படிக்க முடியாத நிலை உருவானது.கடைசியில் வேறு வழியில்லாத நமீதா தன் வீட்டின் கூரை மீது ஏறி அமர்ந்து படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். கூரை மீது ஏறிய பிறகே நெட் இணைப்பு ஸ்பீடாக கிடைத்துள்ளது. மாணவி நமீதா வீட்டு கூரை மீது ஏறி ஆன்லைன் பாடம் படிக்கும் விஷயம் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளை எட்டியது. இதையடுத்து, நமீதாவின் வீட்டுக்கு வந்த நிறுவன ஊழியர்கள் ஹைஸ்பீட் நெட் வசதி செய்து கொடுத்தனர்.பல தடைகளை தாண்டி கல்வி கற்க எண்ணிய அந்த மாணவிக்கு அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் எம்.பி ஆகியோர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


Tags : Kerala ,student , Ned Speed, Home, Roof, Educated, Kerala Student, Accumulate, Appreciate
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...