×

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து;தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் : அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி

மதுரை : திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து எனவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.முக எம்எல்ஏவும், மாவட்டச் செயலாளருமான அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனியார் மருத்துவமனையின் மருத்துவரிடம் நலம் விசாரித்தார். மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரித்தார்.இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் மருத்துவமனைக்கு சென்று அன்பழகன் உடல்குறித்து மருத்துவர்களிடம் விசாரித்னர்.

இந்த நிலையில், மதுரை பழையகுயவர்பாளையம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்றத்தில் தங்களுடைய ஆட்சியையும், கட்சியையும் அதிகமாக அன்பழகன் விமர்சித்திருந்தாலும், அவருக்கு உடல்நலம் குன்றியிருக்கும் இச்சமயத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்ள மாட்டோம் என்று கூறினார்.மேலும், திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து எனவும், அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், திராவிட இயக்கம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்பது தான் தங்களுடைய ஒரே நோக்கம் என்றும் செல்லூர் ராஜு கூறினார். அமைச்சர் செல்லூர் ராஜூவின் கெத்தான பேச்சு சமுக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : J.Anabhakaran ,DMK ,property ,Selur Raju ,Dravidian , DMK, MLA, JAbalankan, Dravidian Movement, Property and Aids, Minister Selur Raju
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...