×

ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளி கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ளும்: உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை!

டெல்லி: ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளி கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்கி பெருகிய வெட்டுக்கிளி கூட்டம் அங்கிருந்து அரேபிய பாலை வனத்துக்கு வந்து பாகிஸ்தான் வழியாக மே மாதத்தில் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தது. தற்போது இந்த வெட்டுக்கிளிகள் வட மாநிலங்களில் உள்ள விளை நிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. இவற்றை விரட்டும் பணியில் தீயணைப்பு படைகளோடு, கண்காணிப்பு சாதனங்கள், டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பில் உள்ள பயிர்கள் வெட்டுக்கிளி படையெடுப்பால் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரானிலும் வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறை வெட்டுக்கிளிகள் கூட்டம் ஜூன், ஜூலை மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்துக்கு அலை அலையாக படையெடுத்து வரும் என ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா, தெலுங்கானா, உத்திரகாண்ட, அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு  எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை தலைநகர் டெல்லியில் சூழ்ந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்கின்றன. இந்த வெட்டுக்கிளிகள் தென் மாவட்டங்களில் கர்நாடகா வரை பரவும் என ஐநா உணவு பாதுகாப்பு அமைப்பு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : India ,invasion ,Food and Agriculture Organization ,grasshopper meeting , July, Locust, Invasion, India, Food and Agriculture Organization, Warning
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...