×

பிரேசிலில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் பலி : உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் நிரம்பி வழியும் மையானங்கள்!!

பிரேசில் : கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ள பிரேசில் நாட்டில், நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பிரேசில் நாட்டில், கொரோனாவுக்கு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் மையானங்கள் நிரம்பி வருகின்றன. பிரேசிலில் கொரோனா வைரஸால் இதுவரை 6,46,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,047 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

210 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரேசில் கடந்த இருவாரமாக கொரோனா வைரஸின் மையமாக மாறியுள்ளது.கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும் (அமெரிக்காவில் 19, 65,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்) , பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் வருவதை அமெரிக்கா தடை செய்துள்ளது.கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா தொற்று ஜூன் மாதம் மேலும் அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஊரடங்கு நடவடிக்கையை தளர்த்த கூடாதென்று அறிவுரை வழங்கிய உலக சுகாதார அமைப்பை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை பிரேசில் அதிபர் பேசும்போது, “ உலக சுகாதார அமைப்பு ஒரு தலைபட்சமான அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி கொள்ளாவிட்டால் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும்” என்று தெரிவித்தார்.

Tags : Brazil ,Coroner ,No Bodies ,Bury ,Kills One Minute , Brazil, Corona, Sacrifice, Bodies, Burial, Place, Magic
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...