×

கடத்தூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான சின்னவெங்காயம்

கடத்தூர்: கடத்தூர் ஒன்றியத்தில் புட்டிரெட்டிபட்டி, இராமியணஅள்ளி, கேத்துரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி, வத்தல்மலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் சின்ன வெங்காயம் பதப்படுத்தப்பட்டு, உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சேலம், கோவை, கிருஷ்ணகிரி, நாகை உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து செல்கின்றனர். வெங்காயம் தட்டுப்பாட்டால், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ₹150 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர், விலை படிப்படியாக குறைந்து, தற்போது கிலோ ₹40 முதல் ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Harvest Ready , Harvesting
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...