×

அமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட விவகாரம்: 2 காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 57 காவலர்கள் ராஜினாமா!


வாஷிங்டன்: அமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட இரு காவல்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னெபோலீஸ் நகரில், கடந்த மாதம் 25ம் தேதி ஜார்ஜ் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை கீழே தள்ளி அவரது கழுத்தில் ஒரு போலீசார் பலமாக அழுத்தியுள்ளார். மக்கள் முன்னிலையில் சாலையில் நடந்த இந்த சம்பவத்தின் போது ஜார்ஜ் உயிரிழந்தார். ஜார்ஜின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறும் புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றது.

அந்த வகையில் மினசோட்டா மாகாணத்தில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நியார்கில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த பெபோல்லோ அணியின் போலீசார் சென்று கொண்டிருந்த போது 75 வயது முதியவர் ஒருவர் கேள்வி கேட்க எத்தடிக்கும் போது அவரை ஒரு காவலர் கீழே தள்ளிவிட்டார். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. பல நாட்களாக அமைதியாக நடந்துவந்த போராட்டத்தில் தற்போது நடந்த விஷயம் மிகவும் வருத்தமளிக்கும் நிலையில் உள்ளது. தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புள்ள இரு காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் காவலர்களின் பணியிடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 57 போலீசார் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.


Tags : Guards , US, elderly, 2 guards fired, resignation
× RELATED பெண் இன்ஸ்பெக்டருக்கு 2வது முறையாக கொரோனா: காவலர்கள் அதிர்ச்சி