×

தமிழகத்தில் புதிய முதலீடுகளை ஈர்க்க ‘ஒளிரும் தமிழ்நாடு’ மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!!

சென்னை : இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு என்ற மாநாட்டை காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியைத் தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெறும், ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொலி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணித் தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். சிஐஐ (CII) தலைவர் ஹரி தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் தினேஷ், சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழுமத்தின் துணைத்தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Tags : Palanisamy ,Glorious Tamilnadu Conference ,Tamil Nadu ,telecom conference , Tamil Nadu, investing, 'flashing Nadu', conference, Chief palanicami, inaugurated
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை