×

சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் ஜெ. அன்பழகன் உடல்நலம் பற்றி நேரில் விசாரித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகன் எம்.எல்.ஏ. உடல்நலம் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்தார். திமுகவின் எம்.ஏல்.ஏவும், திமுக-வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஜெ. அன்பழகன் உடல்நலக்குறைவால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவருடைய உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ஜெ. அன்பழகனை நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு மருத்துவர்களிடமும், அவருடைய குடும்பத்தாரிடமும் உடல்நலம் முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார். ஸ்டாலினுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஏற்கனவே இவருடைய உடல்நலம் குறித்து தமிழக முதலமைச்சர் தொலைபேசி மூலமாக மருத்துவர் குழுவிடம் உரையாடினார். தேவையான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். நேற்றைய தினம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று எம்.எல்.ஏவின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். தற்போது அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், தொடர்ந்து ஐ.சி.யூ.வில் அவர் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் அவருடைய உடல்நிலையை கண்காணித்து வருகின்றார்கள். ஜெ. அன்பழகன் தற்போது திமுகவில் சென்னை மேற்கு மண்டலத்துடைய செயலாளராக இருக்கின்றார். அதேவேளையில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Stalin ,hospital ,J ,Anbalakaran ,DMK ,Chennai ,Chrompet , Chennai Chrompet, Hospital, J. Love, Health, Stalin
× RELATED எல்லாரும் டெல்லிக்கு கீழ் இருக்க...