×

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரதம்

தஞ்சை: இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி தஞ்சை ரயிலடியில் உள்ள தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு அலுவலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் நடந்தது. ஆர்பாட்டத்தில், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது.

2020 புதிய மின்சார சீர்திருத்த சட்ட வரைவு மசோதாவை திரும்ப பெற வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கும் உள்நோக்கத்தோடு ஜல்சக்தி துறை கட்டுப்பாட்டில் கொண்டு சென்ற அரசாணையை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதே கோரிக்கை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பைபாஸ் சாலையில் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முககவசம் அணிந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Tags : Free electricity, farmers, fasting
× RELATED சிவகாசி அருகே செங்கமலபட்டியில் வெடி...