×

மீனவர்களுக்கான நிவாரண தொகுப்பு மத்திய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு ஒரு நாளைக்கு ₹500 வீதம் நிவாரண உதவியாக வழங்க கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல்  விரிவான அறிக்கை அளிக்க 3 வார காலம் அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அறிக்கை தாக்கல் செய்ய 4 வார காலம் அவகாசம் வழங்கினர். மேலும், கடைகள், அடையாள அட்டைகள் வழங்குவது தொடர்பாக ஒரு அதிகாரியை நியமித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அப்போது, மீனவர் பாதுகாப்பு சங்கம் தரப்பில் ஆஜரான வக்கீல், மீன்பிடி தடைகாலத்தை கணக்கில் கொண்டு மீனவர்களின் குடும்பத்திற்கு நாள் ஒன்றிற்கு ₹500 நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரினார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், மீன்பிடி தடைகாலத்தில், மீனவர்களுக்கான மத்திய அரசின் நிவாரண தொகுப்பு குறித்து 4 வாரங்களில் தெரிவிக்குமாறு மத்திய அரசின் வக்கீலுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Fisheries ,Relief, Package
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...