×

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 21 தேர்வுகளுக்கான புதிய தேதி வெளியீடு: ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கு அக்.4ல் முதல்நிலை தேர்வு

சென்னை:  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐஆர்.எஸ் மற்றும் ஐஎப்எஸ் பதவிக்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. இந்தாண்டு (2020) சிவில் சர்வீஸ் பணியில் 796 மற்றும் ஐஎப்எஸ் பணியில் 90 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 12ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு சுமார் 12 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல, யு.பி.எஸ்.சி. நடத்த இருந்த 21 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய தேர்வு தேதியை யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ்.

அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ், ஐஎப்எஸ் முதல் நிலை தேர்வுகள் அக்டோபர் 4ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு 5 நாட்கள் நடைபெறும். ஐஎப்எஸ் பதவிக்கான மெயின் தேர்வு வருகிற பிப்ரவரி 28ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வு 10 நாட்கள் நடைபெறும்.அதேபோல இன்ஜினியர் சர்வீஸ் தேர்வு வருகிற ஜனவரி 5ம் தேதியும், மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியும் நடக்கிறது. ஜிேயா சயின்டிஸ்ட் முதல் நிலை தேர்வு ஜனவரி 19ம் தேதியும், மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியும் நடக்கிறது. சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,IPS ,IAS , Release,21 postponed postponement, Corona, Preliminary Examination ,IAS, IPS post
× RELATED யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்