×

கொரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சிய இந்தியா : பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியதால் அதிர்ச்சி!!

டெல்லி : கொரோனா தொற்று பாதிப்பில், ஐரோப்பிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, உலக அளவில் இந்தியா 6வது இடத்தை தொட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்   இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. மக்கள் தொகையில் உலக அளவில் 2ம் இடத்தில் உள்ள இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று உறுதியாகி வருவதால், ஓரிரு மாதங்களில் மிகப்பெரிய எண்ணிக்கையை எட்டும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,36,657 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24  மணிநேரத்தில் மட்டும் 9887 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 294 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை  6642 பேர் உயிரிழந்த நிலையில்,1,15,942 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலக அளவில் இந்தியாவுக்கு 6ம் இடம்

உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 19,65,700 பேருக்கு தொற்று பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 1,11,390 பேர் உயிரிழந்துவிட்டனர். அதற்கு அடுத்தப்படியாக பிரேசில் நாட்டில் 6, 46,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 35,000 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள ரஷியாவில் 4,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் 5,530 பேர் உயிரிழந்துவிட்டனர். தொற்றுக்கு மூலகாரணமாக கருதப்படும் சீனா பாதிப்பு பட்டியலில் 18வது இடத்தில் உள்ளது. சீனாவில் 83,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,634 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் தொடர்ந்து 2ம் இடம்

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 80,229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 28,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 26,334 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : India ,Italy ,crash ,Corona ,Corona Italy ,countries , Corona, Impact, Italy, India, Countries, List, 6th
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்