இறுதிச்சடங்கிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்; ஜார்ஜியாவில் விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு...!

திபிலிசி: ஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்து 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரு  குடும்பத்தினர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இண்டியானாவுக்கு நேற்று மாலை சிறிய ரக விமானத்தில் சென்றனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2  குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5  பேர் பயணித்தனர். இந்த விமானம் ஜார்ஜியா வான்பகுதியில்  சென்றபோது, திடீரென தீப்பற்றி எரிந்து  தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர்.

புத்னம் கவுண்டி மில்லட்வில்லே பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. சிதறிய விமான பாகங்கள் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தன. அந்த விமானம் வானில் சிறிது நேரம்  வட்டமிட்டதாகவும் பின்னர் தீப்பிடித்து விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: