×

டிக்டாக்கில் கலக்கும் பிரபலம் அதிகாரியை செருப்பால் அடித்து அதிரவைத்த பாஜ பெண் தலைவர்: அரியானாவில் அட்டகாசம்

சண்டிகர்: டிக்டாக் புகழ் பாஜ தலைவரான சோனாலி போகத், தன்னை தவறாக பேசிய அரசு அதிகாரியை பொது இடத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.அரியானாவில் டிக்டாக் மூலம் பிரபலமாகி பாஜ.வில் சேர்ந்தவர் சோனாலி போகத். இவர் கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், சோனாலி, விவசாயிகள் குறை தொடர்பாக ஹிசாரில் உள்ள மாவட்ட சந்தைக் குழு அதிகாரிகளை சந்திக்க சென்றார். அங்கு திடீரென அவர் ஒரு அதிகாரியை பொது இடம் என்றும் பாராமல் செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

‘என்னிடமே துஷ்பிரயோகம் செய்கிறாயா?’ என கேட்டு சோனாலி சரமாரியாக அடிக்க, அந்த அதிகாரி வலியால் துடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘கட்டார் அரசில் பாஜ தலைவர்களின் லட்சணத்தை பாருங்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என கேள்வி எழுப்பினார். சோனாலி கூறுகையில், ‘‘அந்த அதிகாரி என்னை தவறாக கேவலமாக பேசினார். அதனால்தான் அடித்தேன். இனி அவர் எந்த பெண்ணிடமும் தவறாக பேச மாட்டார்,’’ என்றார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி சோனாலி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.


Tags : Baja Girl Leader ,Celebrity Officers ,Attakasam ,Haryana , Baja Girl,Leader Shot, Shakti
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்