ஆம்பன், நிசர்காவைத் தொடர்ந்து கேட்டி ? : வடக்கு அந்தமானில் புதிய புயல் சின்னம் உருவாகிறது!!

சென்னை : ஆம்பன், நிசர்காவைத் தொடர்ந்து வடக்கு அந்தமானில் புதிய புயல் சின்னம் உருவாகி வருகிறது. மகாராஷ்டிராவை தாக்கிய நிசர்கா புயல் முற்றலுமாக வலுவிழந்த பின்னர், 8ம் தேதி வடக்கு அந்தமான் - மியான்மர் இடையில் இந்த புதிய புயல் சின்னம் உருவாகும் என வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். அது முதலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக தோன்றி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, ஒடிசாவை நோக்கி நகரும்.அப்போது சிறு புயலாக உருவெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. அது ஆந்திரா - ஒடிசா இடையே ஜூன் 10ம் தேதி கரையை கடக்கும்.

அப்போது கர்நாடகாவில் குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும். அதே போல கேரளாவின் வயநாடு பகுதிகளிலும், தமிழகத்தின் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் பருவமழை தீவிரமடைய உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  கனமழை பெய்தால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய கடற்பகுதியில் கடந்த 3 வாரங்களில் உருவாகும் 3வது புயலாக இது இருக்கும். இதனிடையே தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாகை, காரைக்கால் உள்ளிட்ட13 மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Related Stories:

>