×

18,693 பேர் பாதிப்பு.. சென்னையை இறுக்கிப்பிடிக்கும் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் : 5 மண்டலங்களில் ருத்ரதாண்டவம்!!

சென்னை:  ஜூன் 5ம் தேதி நிலவரப்படி மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 18693 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9392 பேர் குணம் அடைந்துள்ளனர். 8947 பேர் பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் உள்ள 15 மாவட்டங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 3388 ஆக உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டையில் 2,261 ஆகவும். கோடம்பாக்கத்தில் 2,123 ஆகவும், தேனாம்பேட்டையில் 2,136 ஆகவும், திருவிக நகரில் 1,855 ஆக உள்ளது.

ஜூன் 5ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

திருவெற்றியூர்: 670
மணலி: 259
மாதவரம் 490
தண்டையார் பேட்டை  2,261
இராயபுரம் 3388
திருவிக நகர் 1,855
அம்பத்தூர் 684
அண்ணா நகர் 1660
தேனாம்பேட்டை 2,136
கோடம்பாக்கம்  2,123
வளசரவாக்கம் 975
ஆலந்தூர் 289
அடையாறு 1042
பெருங்குடி 334
சோழிங்கநல்லூர் 339

Tags : zones ,Chennai ,Rudradandavam , Damage, Madras, Coronavirus, Virus, Zones, Rutradandavam
× RELATED மாநில அளவில் ஈட்டி எறிதல் முதலிடம்...