×

கட்டுப்பாடு பகுதியில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் நேரடியாக வீடுகளில் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்

சென்னை: கட்டுப்பாடு பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்று சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிக்கை:10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலும், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு வரும் 16ம் தேதியும், மார்ச் 24ம் தேதி நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு  தேர்வை எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் வருகிற 18ம் தேதியும் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகளை எழுதவுள்ள அனைத்து தனித் தேர்வர்களும் (தட்கல் உட்பட) 4ம் தேதி (நேற்று) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்திற்கு சென்று ஹால் டிக்கெட்   என்ற வாசகத்தினை கிளிக் செய்து தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் தேர்வு தொடர்பான விவரங்களை அறிய, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டுள்ள செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். தேர்வினை எழுதவுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.dge.tn.gov.in  என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை இணையதளம் மூலம் பதிவு செய்து மாணவர்களே தங்களது  தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் மற்றும் வெளியூரிலிருந்து வந்து வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களுக்குரிய நுழைவுச் சீட்டு தலைமை ஆசிரியர் மூலம் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags : Halfcity ,Control Area ,homes ,Halliday Homes , students , Halliday,Collector ,Information
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...