×

சசிகலா புஷ்பாவுக்கு ரூ.6 லட்சம் அபராதம்

சென்னை: பாஜக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுக்கு ₹6 லட்சம் அபராதம் விதித்து புதுடெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அதிமுக ராஜ்யசபை எம்பி சசிகலா புஷ்பா (தற்போது பாஜகவில் உள்ளார்)  டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தன்னையும் மற்றொரு நபரையும் இணைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. இதனால், தனது மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த புகைப்படத்ைத சமூக வலைத்தளத்திலிருந்து நீக்குமாறு சம்மந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதி ராஜிவ் சகாய் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் தனது புகைப்படத்தை யார் மார்பிங் செய்தார் என்று தெரிவிக்கவில்லை.

அது மட்டுமல்லாமல் அவருடன் புகைப்படத்தில் உள்ள நபரையும் அவர் வழக்கில் சேர்க்கவில்லை. சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை நீக்க மனுதாரர் கோர முடியாது. எனவே, மனுதாரருக்கு இந்த நீதிமன்றம் அபராதம் விதிக்கிறது. அவர் பேஸ்புக், கூகுள், யுடியூப் நிறுவனங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், பெண் அரசியல்வாதி தனது அந்தரங்கம் குறித்து வெளியாகும் தகவல்களை தடுக்க வேண்டும் என்று கோர உரிமை உள்ளது. அதே நேரத்தில், மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதியான அவரின் திரைமறைவு சந்திப்புகள் குறித்தும் அவரை சந்தித்த நபர் யார் என்று கேட்கவும் மக்களுக்கு உரிமை உள்ளது” என்றும் நீதிபதி  கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : Sasikala Pushpa , Sasikala Pushpa, fined, Rs.6 lakh
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...