×

காயிதே மில்லத் பிறந்தநாள் விழா தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 144 தடை தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜூன் 5ம் நாள் காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பிறந்தநாள் சென்னையில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. ஜூன் 5ம் நாள் அவரது நினைவிடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார். 144 தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நினைவிடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Tags : Gayette Millat ,Birthday , Gayette Millat's, Birthday ,Announced
× RELATED சிங்காரவேலர் 165வது பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து