×

அரசுக்கு எதிராக போராடியவர் எனக்கூறி தேனி பெண் போலீஸ் அதிரடி டிஸ்மிஸ்

தேனி: தேனி, உத்தமபாளையம் அருகே நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிரேமா (28). 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தற்போது திருச்சி போலீஸ் பயிற்சி மையத்தில் உள்ளார். இந்நிலையில், பிரேமா ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பில், கலைமணி என்ற பெயரில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதும், கம்பம், குமுளி, உத்தமபாளையம் காவல்நிலையங்களில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்ததும் தெரிய வந்தது. உத்தமபாளையத்திற்கு வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு எதிரான வாகன மறியல், பிரதமர் மோடிக்கு எதிராக கம்பத்தில் நடந்த போராட்டத்தில் பிரேமா கலந்து கொண்டுள்ளார்.  

இதையடுத்து, தேனி மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி பயிற்சியில் இருந்த பெண் போலீஸ் பிரேமாவை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதற்கான ஆணை திருச்சி பயற்சி மையத்தில் இருந்த பிரேமாவிடம் வழங்கப்பட்டு அங்கிருந்து வேனில் அழைத்து வந்து நேற்று அதிகாலை அவரது வீட்டில் விட்டுச் சென்றனர்.



Tags : Theni Female Police Action ,Theni Girl Police Action ,state , fought ,state, Theni, Girl Police, Dismiss
× RELATED அப்போ வேண்டாம்… இப்போ ரெடியாம்… நடிகை...