×

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் மூடப்படும் சார்பதிவாளர் அலுவலகங்கள்

சென்னை: 100 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஊழியர்களால் சார்பதிவாளர் அலுவலகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 575 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டன. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் பணிக்கு வரும் ஊழியர்கள் முககவசம், கையுறை அணிய வேண்டும். சானிடைசர், சோப் பயன்படுத்தி அடிக்கடி கை கழுவ வேண்டும், விரல் ேரகை பதிவுக்கு தனியாக இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் 30 சதவீதம் பணியாளர்கள் வந்தால் போதும் என்று அரசு அறிவித்தது. ஆனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் 100 சதவீத பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் மற்ற அரசு துறை அலுவலகங்களில் 6 நாட்கள் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பதிவுத்துறையில் மட்டும் 6 நாட்களுக்கும் 100 சதவீதம் அலுவலர்கள் பணிக்கு வர வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வருவதால் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது என்று ஊழியர்கள் அச்சம் தெரிவித்து இருந்தனர். ஆனாலும், ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதால் அலுவலகங்கள் மூடப்பட்டு வருகிறது. குறிப்பாக, திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மூடப்பட்டன. இதே போன்று அருப்புக்கோட்டை சார்பதிவாளர் அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அனைத்து ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மதுரையில் 2 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்றால் மூடப்பட்டன.

இந்த நிலையில் ஏற்கனவே, ஆம்பூர், வாணியம்பாடி, குன்றத்தூர் உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் 100 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வருவதை தடுக்கா விட்டால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கொரோனா தொற்று ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று பதிவுத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

*  திருப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மூடப்பட்டன.
* அருப்புக்கோட்டை சார்பதிவாளர் அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று.
* மதுரையில் 2 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.
* ஏற்கனவே, ஆம்பூர், வாணியம்பாடி, குன்றத்தூர் உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.



Tags : offices ,Coroner , Coroner's offices , problem , corporal-infested employees
× RELATED அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும்...