×

விண்ணை தாண்டி வந்த கொரோனா விமான நிலைய நிர்வாக அலுவலகம் மூடல்

சென்னை: சென்னை விமான நிலையம் நிா்வாக பிரிவு மேலாளர் ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, விமான நிலைய நிர்வாக அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் மின்சார பராமரிப்பு பிரிவு மேலாளர் ஒருவர் நேற்று காலை கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவருக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். அதில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்சார பராமரிப்பு பிரிவு மேலாளர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.சென்னை விமானநிலைய நிர்வாக அலுவலகம் தரை தளம் மற்றும் 3 தளங்களையுடையது. அதில் 2 வது தளத்தில் மின்பராமரிப்பு, அக்கவுண்டஸ், சிவில் ஆகிய 3 பிரிவுகள் உள்ளன. தற்போது 2 ஆம் தளத்தில் உள்ள 3 பிரிவுகளும் நேற்று மாலை முதல் மூடப்பட்டுள்ளது. அதில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா்.

இதற்கிடையே நிா்வாக அலுவலகம் முழுவதையுமே தற்காலிகமாக மூடி, கிரிமிநாசினி மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனா்.இதையடுத்து சென்னை விமானநிலைய நிா்வாக அலுவலகம் திங்கள் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை விமானநிலையத்தில் ஏா்போா்ட் அத்தாரிட்டி  டிரைவா் ஒருவா் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை வானகரம் தனியாா் ருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சையில் உள்ளாா் என்பது குறிப்பிடத்ததக்கது.



Tags : Office Closure Airport Administration ,Corona Airport Administration ,sky ,Corona , Corona ,crossed ,sky, Airport ,Office
× RELATED இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு