×

மாஸ்க் அணிவதால் ஆபத்தா?: மயக்கவியல் டாக்டர் விளக்கம்

சென்னை: மாஸ்க் அணிவதால் அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிலருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உண்டு. எனவே, மாஸ்க் எப்போது தேவையோ அப்போதுதான் பயன்படுத்த வேண்டும்.இதுகுறித்து மயக்கவியல் நிபுணர் டாக்டர் ராஜலட்சுமி கூறியதாவது:கொரோனா பரவல் ஒருவரிடம் இருந்து மற்ற நபர்களுக்கு பரவுவதை தடுக்கும் முதல் தேவை மாஸ்க்.  இதையே உலக சுகாதார மையம் முதல், மத்திய, மாநில அரசுகள், மருத்துவர்கள் வரை பரிந்துரை செய்கின்றனர். ஆனால், நாம் மாஸ்க் எப்படி அணிகிறோம், எந்த மாதிரி மாஸ்க் அணிகிறோம், எல்லாம் சரிதானா என்பது பற்றி பொதுமக்களுக்கு சரியாக தெரியவில்லை. மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப்பணியாளர்கள் பயன்படுத்தி வந்த சர்ஜிக்கல் மாஸ்க், பச்சை மற்றும் நீல நிறத்தில் காணப்படும் இதற்கு இன்னொரு பெயரும் உண்டு வாய், மூக்கை பாதுகாக்கும் மாஸ்க். இந்த மாஸ்க் பொதுவாக நம்மிடம் இருக்கும் தொற்று பிறருக்கு பரவி விடக்கூடாது என்று அணியப்படுவது சர்ஜிக்கல் மாஸ்க் நீர் துளிகளை பிற இடத்தில் பரவாமல் தடுக்கும்.

நம்மிடம் இருந்து வரக்கூடிய கிருமிகளிலிருந்து சுற்றுசூழலை பாதுகாக்க பயன்படுகிறது. ஆனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் என்பது ரூபணமாகவில்லை.மற்றொரு வகை ரெஸ்பிரட்டரி மாஸ்க்( சுவாச மாஸ்க்). இதில் காற்றை பிரிப்பதற்கு, வைரஸை தடுப்பதற்கான பில்டர்ஸ்(வடிகட்டிகள்) வைக்கப்பட்டு இருக்கும். இதனை அணிந்திருப்பவருக்கு மாசுகளிடமிருந்தும்,  வைரஸ்கள் மற்றும் நுண்ணுயிரிகளிடமிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. இதனை எப்.எப்.பி மாஸ்க் என்று கூறுவார்கள். என்.95 மாஸ்கும் இந்த வகையை சேர்ந்தது தான். இந்த எப்.எப்.பி மாஸ்க்குகளை அணிந்த பிறகு அழுக்கு, தூசு படிந்து வடிக்கட்டியின் திறன் குறையும் வரையோ, அல்லது கிழியும் வரையிலையோ அணியலாம். ஏன்னென்றால், வைரஸை கட்டுப்படுத்தும் தன்மை என்.95 போன்ற ரெஸ்பிரட்டரி மாஸ்க்குகளுக்கு உண்டு. என்.95 மாஸ்குகள் ஒரு முறை பயன்படுத்த கூடியதுதான், அதன் வடிக்கட்டிகள் மாசடைந்தால் அதனை பயன்படுத்தக்கூடாது. 20 நிமிடம் பயன்படுத்தாலாம். மற்றபடி பொதுமக்கள் துணியால் செய்யப்பட்ட மாஸ்குகளை பயன்படுத்தினாலே போதும்.

பொதுமக்கள் என்.95 போன்ற ரெஸ்ப்ரேட்டரி மாஸ்க்குகளை தவிர்க்கலாம். ஏன்னெறால், அதில் பில்டர்கள் இருப்பதாலும், எப்போதும் அதனை அணிந்து கொண்டு இருப்பதாலும், அதில் தூசு படிந்துவிடும், சரியாக சுத்தம் செய்யாமல் அணிந்து கொண்டே இருப்பதால், உடலுக்கு குறைந்தளவு ஆக்சிஜனே கிடைக்கிறது. அப்படி ஆக்சிஜன் குறைந்தளவு உடலுக்கு செல்வதால், ரத்ததில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதனால் மூளைக்கும் ஆக்சிஜன் குறைந்து, மூளையின் செயல்திறன் குறைந்துவிடும் அபாயம் உள்ளது. உடல் சோர்வாக உணர முடியும், உயிருக்கு ஆபத்து ஏற்படும். இதேபோல், வீட்டில் தனியாக இருக்கும்போது, காரில் தனியாக செல்லும்போது, என எப்போதும் மாஸ்க் அணிந்து செல்பவர்களை அதிகமாக பார்க்க கூடுகிறது. மேலும் உடபயிற்சி செய்பவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள் மாஸ் அணிந்து கொள்வது மிகவும் தவறானது.
முக்கியமாக புகை பழக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் எப்போதும் மாஸ்க் அணிவது, மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவே மக்கள் எப்போதும் மாஸ்க் அணியாமல், தேவைக்கேற்ப அணிய வேண்டும். முக்கியமாக சுத்தமான மாஸ்குகளை அணிய வேண்டும். வெயிலில் காயவைத்து பயன்படுத்துவது அவசியமானது சூரிய ஒளியில் காய வேண்டும். எப்போது 2 அல்லது மூன்று மாஸ்குகளை வைத்து மாற்றி மற்றி பயன்படுத்துங்கள். இவ்வாறு டாக்டர் ராஜலட்சுமி தெரிவித்தார்.புகை பழக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் எப்போதும் மாஸ்க் அணிவது, மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும்.



Tags : Anesthesiology Doctor , Risk ,wearing ,mask ,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...