×

இறந்தவர்களுக்கும் புரமோஷன் கொடுப்பதால் சர்ச்சை பதவி உயர்வு அறிக்கையில் ஓய்வு, இறந்தவர் பற்றிய விவரங்களையும் சேர்த்து தர வேண்டும்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவால் பரபரப்பு

சென்னை: கோட்ட அலுவலங்களில் பதவி உயர்வு தொடர்பாக விவரங்களை கேட்கும்போது வயது முதிர்வினால் ஓய்வு, இயற்கை எய்திருந்தாலும் தகவல் தர வேண்டும் என்று பொதுப்பணித்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் என 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கிறதா, அதற்கான தண்டனை விவரம் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுவது வழக்கம். ஆனால், உயர் அதிகாரிகள் முறையாக அறிக்கை அளிக்காத  காரணத்தால் சில நேரங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

இது, துறையின் நிர்வாக குறைபாடு என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் இனி வருங்காலங்களில் பதவி உயர்வு வழங்கும் முன்பு அனைத்து விதமான தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், பதவி உயர்வு தொடர்பாக அறிக்கை கேட்கும் போது பணியாளர்கள் எவரேனும் வயது முதிர்வினால் ஓய்வு பெற்றிருந்தாலும், தன் விருப்ப ஓய்வில் சென்றிருந்தாலும் மற்றும் நீண்ட நாட்கள் முறைகேடாக பணிக்கு வராமல் இருந்தாலும்/ இயற்கை எய்திருந்தாலும் அவர்கள் பற்றிய விவரங்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டு இருந்தாலும் தவறாமல் இது குறித்து கேட்கும் விரவங்களை தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் ஏதேனும் இல்லையெனில் குற்றச்சாட்டுகள் ஏதும் நிலுவையில் இல்லை எனவும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : deceased ,retirement ,Public Works Officers , Release , deceased should , details, retirement and deceased , controversial promotion, Works Officers
× RELATED வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்