×

இந்தியா பங்கேற்கும் முதல் மெய்நிகர் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை...!

டெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாடு நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்தி ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அவரது பயணம் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் தள்ளிப்போனது.

இந்நிலையில், இந்தியா பங்கேற்கும் முதல் மெய்நிகர் உச்சிமாநாடு இன்று (ஜூன் 4-ம் தேதி) நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக இன்று ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா விவகாரத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியதால் ஆஸ்திரேலியா- சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
 
இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் மருந்து பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் தாது உப்புகள் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென கூறப்படுகிறது. இந்தோ பசிபிக் பகுதியில் சீனா தனது ஆக்கிரமிப்பை அதிகரித்து வரும் பின்னணியில், ஆஸ்திரேலியா உடனான இருதரப்பு உறவுகள் மேம்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



Tags : summit ,Modi ,Scott Morrison ,India ,Australian ,Scott Morrison The First Virtual Summit , The first virtual summit in which India will participate; Prime Minister Modi text with Australia's Prime Minister Scott Morrison
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...