×

படத்திறப்பு விழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜார்  பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டல் எம். முருகேசன். இவர் கடந்த வாரம் மரணம் அடைந்தார். 16 வது நாளான நேற்று அவருடைய திருவுருவ படத்தை  திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு திறந்து வைத்தார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர் சி. எச். சேகர், ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா. செ. குணசேகரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கே. என் பாஸ்கர், பேரூர் செயலாளர் அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், ஒன்றிய கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி, துணை செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய பொருளாளர் வேதாச்சலம், ரா கவரெட்டிமேடு ரமேஷ், முன்னாள் 10 வார்டு உறுப்பினர் டி. கே. ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Filmmaking ceremony Filmmaking ceremony , Filmmaking ceremony
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...