×

பொதுமக்கள் 5 பேருக்கு மட்டுமே அனுமதி: உண்டியல் திறப்பில் பங்கேற்போருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

* வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டது அறநிலையத்துறை

சென்னை: கோயில்களில் உண்டியல் திறப்பில் கலந்து கொள்ள 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறையை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.  இந்து சமய அறநிலையத்துறை  ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து செயல் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: திருக்கோயில்களின் நிர்வாக நலன் கருதி கோயில்களில் உள்ள உண்டியல்களை கோயில்களின் பணியாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களில் 4 அல்லது 5 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்க பரிசீலித்து உண்டியல் திறப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற நிபந்தனைக்கட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

* உண்டியல் திறப்பிற்கு வரும் நபர்கள் கோயில் முகப்பிலேயே தங்களது கைகள் மற்றும் கால்களை கிருமி நாசினி மற்றும் தண்ணீரால் கண்டிப்பாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
*  உண்டியல் காணிக்கைகளை எண்ணுபவர்களுக்கு இடையில் 1 மீட்டர் சமூக இடைவெளியுடன்  அவசியம்.
* அனவைரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
*  உண்டில் திறப்பிற்கு வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். நோய் அறிகுறிகள் இருப்பின் அவர்களை அனுமதித்தல் கூடாது.
* கோயில்களில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், அர்ச்சனை பொருட்கள் விற்பனை, பிரசாதக் கடை மற்றும் புத்தகக் கடை போன்ற இனங்களை ஏலம் எடுத்தவர்கள் தங்களுக்கு  பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது ஊரடங்கு முடிவிற்கு வந்த பிறகு ஏல நிபந்தனைகளைப் பரிசீலித்து தனித்தனியே குறிப்புகள் அனுப்பி உரிய அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும்.
* கோயில்களின் நிர்வாக செலவினங்களுக்காக முதலீடுகளை முதிர்வு செய்து கொள்ள பொது அனுமதி வழங்கிட இயலாது. கோயில்களுக்கு அத்தியாவசிய நிர்வாக செலவினங்களுக்கு தொகை தேவைப்படும் சூழலில் வேறு நிதி ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தும், கோயிலின் நிதி நிலைமையினை மேம்படுத்திட எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கை மண்டல இணை ஆணையர்கள் மூலமாக அனுப்பபடும் நிலையில், இது தொடர்பாக குறிப்புகள் தனித்தனியே பரிசீலித்து தேவையான இனங்களில் மட்டும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

Tags : civilians ,Corona ,opening ,participants , General, Undial, Corona
× RELATED நெய்வேலியில் தொ.மு.ச. அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பு