×

திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடிய நோயான கொரோனா அச்சுறுத்தும் நேரத்தில், திமுக சட்ட விதி:17ஐ பயன்படுத்தி பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அப் பொதுக்குழு கூடும் வரையில், திமுக சட்ட விதி:18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : treasurer ,Duramurugan ,DMK ,MK Stalin , Duramurugan as DMK Treasurer, MK Stalin, DMK leader
× RELATED திமுக, அதிமுக, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி...