×

23 டிஆர்ஓகள் அதிரடியாக இடமாற்றம்: 32 துணை கலெக்டர்களுக்கு பதவி உயர்வு

சென்னை:தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 23 மாவட்ட  வருவாய் அதிகாரிகள்(டிஆர்ஓ) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 32 டெபுடி கலெக்டர்களும் தற்காலிக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். கொரோனா தொற்று பீதிக்கு இடையில் மாநிலம் முழுவதும் மாவட்டங்களில்,  நிறுவனங்களில் பணியாற்றி வரும் 23 மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றிய  டாக்டர் சுகுமார் நேற்று சென்னையில்  தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்(டாஸ்மாக்)  சில்லரை விற்பனை பொதுமேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல் மாநில முழுவதும் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் அதற்கு இணையான பதவிகளில் இருக்கும் எஸ்.அசோகன், ஏ.சிவகாமி, பிரசன்னா ராமசாமி, டாக்டர் மேனகா,  எஸ்.முத்துமாரி, டாக்டர் சுமன்  என மொத்தம் 23 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் மாநில முழுவதும் துணை ஆட்சியர்(டெபுடி கலெக்டர்)  மற்றும் அதற்கு இணையான பதவிகளில் இருந்த 32பேர்  தற்காலிக மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், அதற்கு இணையான பதவிகளிலும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி சென்னையில்  டிட்கோ  மேம்பாட்டு மேலாளராக இருந்த எஸ்.எச்.ஷேக் மொய்தீன் மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டதுடன் வக்பு வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதிவியில் இருந்த எம்.லில்லி ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு உணவு பொருட்கள் வழங்கல் கழகத்தில்  நிர்வாக மேலாளராக இருந்த  ஆர்.ராஜலட்சுமி  தற்காலிக மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில்  நில எடுப்பு பிரிவில் மாவட்ட வருவாய் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மாநிலம் முழுவதும் மொத்தம் 32  டெபுடி கலெக்டர்கள் பதவி உயர்வு பெற்றதுடன் ஒரே நாளில் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : TROs ,deputy collectors , 23 TROs, 32 Deputy Collectors, Promoted
× RELATED தமிழகம் முழுவதும் 35 டிஆர்ஓக்கள் பணியிட மாற்றம்