×

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு: கே.பாலகிருஷ்ணன் அறிக்கை

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப் படிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட 15 சதவிகித இடங்களிலும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 50 சதவிகித இடங்களிலும் ‘’தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு (கல்வி நிலையங்கள், அரசு வேலைவாய்ப்பு மற்றும் பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்குதல்) சட்டம் 1993ன் படி இடஒதுக்கீடுகளை பின்பற்றாமல் மத்திய அரசு இந்தச் சட்டத்தை மீறி உள்ளது. எனவே, மத்திய தொகுப்பு இடங்களிலும் தமிழகத்தின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன்.


Tags : Medical Studies, Reservation, Supreme Court, K. Balakrishnan
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...